வாஷிங்டன் [அமெரிக்கா]:அமெரிக்காவின் ஆராய்ச்சி பத்திரிகையான 'ஆன் அடிக்ஷன்' இதழ் நடத்திய ஒரு ஆய்வின்படி, மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவைப் பயன்படுத்துபவர்கள் நிக்கோட்டின் பொருட்களை உட்கொள்வதற்கு அதிக வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது சாதாரணமாக நிக்கோடின் உட்கொள்ளாதோரை விட அதிகமாகும்.
வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, மருத்துவ மரிஜுவானா (மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் கஞ்சா) மருந்துகள் பயன்படுத்தும் நோயாளிகளிடையே நிக்கோட்டின் பயன்பாட்டை முதலில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு குறித்துப்பேசிய மரியோ ஸ்கூல் ஆஃப் பார்மசி ரட்ஜர்ஸ் எர்னஸ்டின் மருத்துவப் பேராசிரியர் மேரி பிரிட்ஜ்மேன் கூறுகையில், "கஞ்சா மற்றும் நிக்கோட்டினை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது அதிகரித்து வருவது கவலையாக உள்ளது. ஆனால், போதைக்காக கஞ்சா பயன்படுத்தப்படுவது மற்றும் நிக்கோடின் பயன்படுத்தப்படுவது ஆகியவற்றிற்கு இடையே தொடர்பு இருந்தாலும், மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்துபவர்களிடையே நிக்கோட்டின் பயன்பாடு பற்றி அதிகம் அறியப்படவில்லை" என்று கூறினார்.
மருத்துவ மரிஜுவானா (மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் கஞ்சா) 18 வயது முதல் 89 வயதுக்குட்பட்ட 697 நோயாளிகளிடம் தரப்பட்டு, அவர்களின் நிக்கோட்டின் மற்றும் கஞ்சா பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் கஞ்சாவை எவ்வாறு சுயமாகப் பயன்படுத்தினார்கள் என்பது குறித்தும் மற்றும் சிகிச்சைக்கான கஞ்சாவைப் பயன்படுத்துவதற்குத் தகுதியான மருத்துவ நிலைமைகள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
மருத்துவ மரிஜுவானா(மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் கஞ்சா) பயன்படுத்துபவர்களில் 40 விழுக்காடு பேர் நிக்கோட்டினைப் பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின்படி அமெரிக்காவில் புகைப்பிடிக்கும் பெரியவர்களில் 14 விழுக்காட்டைவிட, இந்த நிக்கோட்டின் பயன்படுத்துவோர் விகிதம் மிகவும் அதிகமாகும்.