இந்தியாவில் கரோனா தொற்றுக்கு எதிராக அதிகப்படியான எண்ணிக்கையில் செலுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகள் கோவாக்சின், கோவிஷீல்ட். இந்த இரண்டு தடுப்பூசிகளையும் கலவையான டோஸ்களில் பயன்படுத்தும் போது, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
'கோவாக்சின், கோவிஷீல்டு கலவை - நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது' - icmr
கரோனா தொற்றுக்குத் தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்ட் இரண்டையும் கலந்து செலுத்துவதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
அதன்படி, இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு, அடினோ வைரஸ் (adenovirus), இன்னாக்டிவேட்டட் ஹோல் வைரஸ் (inactivated whole virus) எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் சீராகச் செயல்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'பன்மடங்கு அதிகரித்த கரோனா தடுப்பூசி உற்பத்தி!'