பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் பிரச்சனையான ஹிஜாப் விவாகரத்தில் உயர்நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வரும் வரை கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணியக் கூடாது எனக் கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று (பிப். 13) தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவாஸ்தி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்தது.
தலைமை நீதிபதி கூறுகையில், “ கல்லூரி அல்லது பள்ளிகளாக இருந்தாலும் சீருடை பரிந்துரைக்கப்பட்டால், தீர்ப்பு வரும் வரை அதைப் பின்பற்ற வேண்டும் என்பதை நாங்கள் மிக தெளிவாகக் கூறுகிறோம்” என்றார். மாணவர் தரப்பில் ஆஜாரான வக்கீல் கூறுகையில், “ இடைக்கால உத்தரவை காரணம் காட்டி மாணவர்களைக் கல்வி நிறுவனங்களிலிருந்து வெளியே அனுப்புவதாகவும், தலையில் முக்காடு அணிந்த ஆசிரியர்களும் திருப்பி அனுப்பப்படுவதாகவும், இந்த பிரச்சினை குறித்துக் கேட்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.