புதுச்சேரி: லாஸ்பேட்டை பகுதியில் காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். கரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை.
இதனால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்தக்கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.