கோலர் :கர்நாடக மாநிலம் கோலர் மாவட்டம் மலூர் தாலூகா பகுதியில் உண்டு உறவிடப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரயிலான 6 மாணவர்கள், பள்ளி விடுதியின் செப்டிக் டேங்கை சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
இந்த வீடியோ வைரலான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தன. இந்நிலையில், சம்பவம் நடந்த பள்ளியில் சமூக நலத் துறை இணை இயக்குநர் ஆய்வு நடத்தினார். தொபர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களின் பெற்றோர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அந்த விடுதியின் பொறுப்பு வார்டன் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், செப்டிக் டேங்க் கழுவிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.