புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் 2021-2022 கல்வியாண்டிற்கான முதுகலை வணிக மேலாண்மை, பன்னாட்டு வணிக மேலாண்மை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்புக் கல்வியாண்டிற்கான சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களை புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொது நுழைவுத்தேர்வு
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேலாண்மைத் துறை சார்பில் வழங்கப்படும் முதுகலை வணிக மேலாண்மை, பன்னாட்டு வணிக மேலாண்மை ஆகிய படிப்புகளுக்கு இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) சார்பில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
தற்போது, மேற்சொன்ன படிப்புகளில் சேர்ந்து பயில புதுச்சேரி பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு மூலமும் தற்போது மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையானது முதலில் இந்திய மேலாண்மை நிறுவனம் சார்பில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு, மீதமுள்ள காலி இடங்கள், புதுச்சேரி பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
இப்படிப்புகளுக்கு மாணவர்கள் வருகின்ற 27ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும். மேலும் விவரங்களுக்கு புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தைக் காணுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : தேசிய நல்லாசிரியர் விருது - தமிழ்நாடு ஆசிரியர்கள் 2 பேர் தேர்வு