பெங்களூரூ:புகப்புத்தகத்தில் இந்தியாவின் முக்கிய துன்பியல் சம்பவங்களின் ஒன்றான புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் கொண்டாடும் வகையில் பதிவிட்ட பொறியியல் மாணவருக்கு ஐந்தாண்டு சிறை தந்தனை விதித்து பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கசரன்க்னஹல்லி பகுதியைச் சேர்ந்த ஃபைஸ் ரசீத் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது முகப்புத்தகத்தில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் குறித்து கொண்டாடும் வகையில் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த மாணவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்விற்குட்படுத்தப்பட்டது. மேலும், மாணவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. 2019ஆம் ஆண்டு பிப்.14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமா மாவட்டத்தில் 78 கான்வாய் பேருந்துகளில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர்.