தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமை, கல்வி நிர்வாகம் அதில் தலையிட முடியாது: நீதிமன்றத்தில் வழக்கு

ஹிஜாப் அணிய தடைவிதித்த அரசு மகளிர் கல்லூரியை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமை - கல்வி நிர்வாகம் அதில் தலையிட முடியாது : கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு
ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமை - கல்வி நிர்வாகம் அதில் தலையிட முடியாது : கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு

By

Published : Feb 2, 2022, 9:30 AM IST

பெங்களூரு:உடுப்பி அரசு மகளிர் கல்லூரி நிர்வாகம், ஹிஜாப் அணியத் தனக்குத் தடைவிதித்ததாக இஸ்லாமியப் பெண் ஒருவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அவர் அளித்த மனுவில், ”ஹிஜாப் அணிவது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமை, அது இஸ்லாத்தில் கடைப்பிடிக்கும் முக்கியப் பழக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 2021 டிசம்பர் 8 அன்று இவர் மற்றும் இன்னும் சில இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர்.

இதனால் கல்லூரியில் இவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மனுதாரரும், ஹிஜாப் அணிந்துவந்த இன்னும் சில இஸ்லாமிய பெண்களும் கல்லூரியின் உடை விதிகளை மீறியதாகக் கல்லூரி தரப்பில் சொல்லப்படுகிறது. கல்லூரியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமான செயல், ஒடுக்குமுறையான போக்கு என்று மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஹிஜாப் அணிவது மதச் சுதந்திரத்தின் ஒரு பங்கு

மேலும், அவரின் மனுவில், ”கல்லூரியின் இந்தப் போக்கு இந்த மாணவிகளை மட்டும் பாதிக்கப்போவதில்லை, ஒத்துமொத்த கல்லூரி மாணவ, மாணவியினரின் உளவியல், மனுதாரரின் எதிர்காலத்தையும் பாதிக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது. மாணவியின் மதத்தினால் அவரின் கல்வியை பாதிப்பிற்குள்ளாக்கியிருக்கிறது கல்லூரி நிர்வாகம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25, 26 சட்டப்பிரிவின்படி மத அனுசரிப்பு சுதந்திரம் வழங்கப்படுகிறது. மேலும், புனித குரானின் வாசகத்தைச் சுட்டிக்காட்டி, “ஒரு இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்படும் பெண் ஹிஜாப் அணியாதிருப்பது அந்த மார்க்கத்தில் அடிப்படை மற்றங்களை நிகழ்த்தும். இதனால் இஸ்லாமிய மார்க்கத்தில் ஹிஜாப் அணிவது முக்கியப் பழக்கமுறையாகும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களை ஏமாற்றும் மயாஜால பட்ஜெட் - நாராயணசாமி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details