கோழிக்கோடு:என்ஐடி கோழிக்கோடு மெகா பாய்ஸ் விடுதி கட்டிடத்திலிருந்து திங்கட்கிழமை (டிச.5) ஹைதராபாத்தைச் சேர்ந்த பி.டெக் மாணவர் குதித்து உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லி, ஜெயநகர், சாய் இந்திரா ரெசிடென்ட்ஸ் காலணியைச் சேர்ந்த சென்னுபதி வெங்கட் நாகேஸ்வர ராவ் மற்றும் சென்னுபதி பாரதி ஆகியோரின் மகனான சென்னுபதி யஷ்வந்த் (20) கோழிக்கோடு என்ஐடியில் பி.டெக் கணினி அறிவியல் இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவர் கல்லூரியின் ஆண்கள் விடுதியின் ஒன்பதாவது மாடியில் வசித்து வந்த மாணவன் டிச.5 மதியம் 2.30 மணியளவில் மூன்றாவது மாடியிலிருந்து குதித்துள்ளார். உடனடியாக மாணவரை மீட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாலை 5.30 மணியளவில் மாணவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்த மாணவன் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று காவல்துறைக்குக் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.