புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டுவருவதைக் கண்டித்தும், கரோனா காலத்தில் ஏற்றப்பட்ட மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரியும் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நேரு தலைமையில் அப்பகுதி மக்கள், தலைமை மின் துறை அலுவலகம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கிழக்கு காவல் துறை கண்காணிப்பாளர் ரச்சினா சிங் தலைமையில் காவல் துறையினர் சட்டப்பேரவை உறுப்பினர் நேருவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: 'திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு'