புதுச்சேரி மாநிலத்தில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் 11ஆம் வகுப்பு வரை, எந்த ஒரு சாதாரண அல்லது சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருவதையொட்டி அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.