தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடி அரசுக்கு எதிராக ஒன்று திரள்வோம் - சீதாராம் யெச்சூரி - எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

மோடி அரசை வீழ்த்தும் யுக்தி குறித்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசிப்போம் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

Sitaram Yechury
Sitaram Yechury

By

Published : Aug 20, 2021, 8:09 PM IST

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று (ஆக.20) ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஆலோசனையில் வரப்போகும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், "நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடரில் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டன.

பொது மக்களின் விவகாரங்களை நாங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு சேர்த்தோம். கோவிட்-19 பரவல், தடுப்பூசி தட்டுப்பாடு, பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் போராட்டம் என பல சிக்கல்களை தேசம் சந்தித்துவருகிறது.

இதை சீரமைக்கும் கடமை எதிர்க்கட்சிகள் முன் உள்ளது. எனவே, மோடி அரசை வீழ்த்தும் யுக்தி குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க:மலைக்க வைக்கும் விலை - இதுதான் குஜராத் 'கோல்ட் ஸ்வீட்'

ABOUT THE AUTHOR

...view details