ஹைதராபாத்:ஏழையாக பிறப்பது தவறில்லை.. ஏழையா இறக்குறதுல தான் தப்பு என்ற வாசகத்தை தன் வாழ்வின் அடையாளமாகக் கொண்டு இன்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, பல்வேறு மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் தான் அண்ணாதுரை.
யார் இந்த அண்ணாதுரை.. இவர் கடந்த வந்த பாதைகள் என்ன?.. ஆட்டோக்காரரிடம் எதற்கு இத்தனை ஆச்சரியம்... என்ற கேள்வி சூழலாம்... ஆனால் இங்கு தான் பலரின் கேள்விகளுக்கு மட்டுமின்றி பலரின் சாதனைக்கு முட்டுகட்டு போடப்பட்டிருக்கும் பூட்டுகளையும் தகர்த்துள்ளார் அண்ணாதுரை...
ஏழ்மையான குடும்பம், பாதியில் நிறுத்தப்பட்டக் கல்வி என இளம் வயதிலேயே தன் உரிமைகள் அனைத்தையும் இழந்த அண்ணாதுரை, படிக்க ஆர்வம் இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்துள்ளார். ஏட்டுக்கல்வி வாய்ப்பை மறுத்தால் என்ன, அனுபவக்கல்வி கைகொடுக்க தயராக இருந்த நிலையில், தொழில் ஆர்வமும் நிறைந்திருக்க தொழில் முனைவராக தன் பாதையை தேர்வு செய்தார்.
என்ன தொழில் என்று திணறிய போது, ஆட்டோ ஓட்டுநராக உருவெடுத்தார் அண்ணாமலை. நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கனு பெற்றோர்கள் சொன்ன போதும், ஏன் அசட்டுப் பேச்சுகள் தலையோங்கிய போதும் தன் பாதையை சலிக்காமல் பின் தொடர்ந்தார். தன் கனவுகளை நம்பின அண்ணாதுரையின் நம்பிக்கையின் ஆழமோ என்னவோ அவரின் வெற்றிக்கு வழிவகுத்தது.
தினசரி ஆட்டோ ஓடினால் கூட, அன்றாட செலவுக்கு வராது என புலம்புபவர்கள் மத்தியில், அண்ணாதுரையின் வெற்றி எப்படி சாத்தியமானது. மாற்றம் ஒன்றே மாறாதது. அதுபோல தான் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் அண்ணாதுரை. முதல் நாள் ஆட்டோ தொழிலில் வருமானம் இல்லை, இரண்டாவது, மூன்றாவது என தொடர்ந்து ஒரு மாதம் இதே நிலைமை நீடித்துள்ளது.
அன்று ஒரு நாள் நிகழ்ந்துள்ளது மாற்றத்திற்கான நேரம். முதியவர் ஒருவர் ஆட்டோவில் ஏற தம்பி உங்க போன் குடுக்க முடியுமா நான் பேசிட்டு தாரான்னு கேக்க, அண்ணாதுரையும் கொடுத்திருக்கிறார். முதியவர் போனில் பேசிவிட்டு நன்றி தம்பி-னு சொல்லிட்டு கிழம்பிய போது அண்ணாதுரைக்கு ஒரு எண்ணம், ஏன் நம்ம ஆட்டோவில் பயணிகளுக்கு தேவையான அத்தியாவசியங்களை ஏற்பாடு செய்யக்கூடாது என்று.
அந்த யோசனைப்படி அண்ணாதுரை, அவரது ஆட்டோவில் பயணாளிகளின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டுகள், பஷில்கள், வினா-விடை, திடீரென மழை வந்தால் பயனிகளுக்கான குடைகள், வழிப்பாதையில் பசித்தால் திண்பண்டங்கள், குளிர்பானங்கள், வெளிநாட்டு பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள், ஐடி துறையினருக்காக இலவச wi-fi, iPod, தொலைக்காட்சி, முதியவர்களுக்காக நாளிதழ், பத்திரிகைகள், குப்பைத்தொட்டி, கிருமி நாசினிகள், முதலுதவிகள் என அண்ணாதுரையின் சிறப்பசங்கள் நீண்டுள்ளது.
படிக்கவில்லை என்றாலும் படிப்பின் சாயலைக்கொண்ட அண்ணாதுரை, வோடபோன்(vodafone), டொயோட்டா (toyato), ராயல் என்ஃபீல்டு (royal enfield), ஹூண்டாய் (hyndai), இன்ஃபோசிஸ் (infosys), சீரம் நிறுவனம் (serum institute), ஃபாக்ஸ்கான் (foxconn), கூகிள் (google), மைக்ரோசாப்ட் (microsoft) போன்ற பல நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களிடத்தில் தன் வார்த்தைகள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அனுபவக்கல்வியில் இத்தனை சாதனை நிகழ்த்த வாய்ப்பிருந்தால், பட்டக்கல்வியில் எத்தனை வாய்ப்புகள் இருக்கும் என்பதை நிஜம் மாறாமல் மாணவர்களிடையே கூறும் போது அண்ணாதுரை இழந்த கல்வியும் அவர்முன் தோற்று நிற்கிறது.
இது மட்டுமின்றி 2013 ஆம் ஆண்டில் TedX-ல் உரை, மாதத்திற்கு 2-ல் இருந்து 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் என தன் கனவு வாழ்க்கையை பல கிண்டல் கேலிகளுக்கு நடுவில் தொலைக்காமல், பல சாதனைகளுடன் வெற்றிநடை போடுகிறார் அண்ணாதுரை.
கல்வி இல்லாத நிலையிலும், தன் திறமை மீதும் கனவின் மீது கொண்ட நம்பிக்கையினாலும் ஆட்டோ ஓட்டுநராக, மக்களின் சக தோழனாக, பயணிகளின் அன்பு சேவை புரிபவராக, மாணவர்களிடத்தில் வழிகாட்டியாக, வாழ்க்கையில் வெற்றியாளராக பயணம் செய்கிறார் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை.
இதையும் படிங்க:மதுரை அருகே கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை துரும்பன் பூனை!