டெல்லியில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவரகாரத்தை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தலைமை தாங்கி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "நாட்டின் ஏழைகள், தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்களின் குரலை ஒடுக்கும் வேலையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டுவருகிறது.
ஆனால், காங்கிரஸ் மூலம் இவர்களின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கும். இங்கு தொடங்கும் இந்தப் போராட்டம் மெல்ல எழுச்சி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான அரசை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பும்.
நாம் அம்பேத்கார், காந்தி ஆகியோரின் சொற்களை மறவாமல் நினைவில் வைக்க வேண்டும். யாரைக் கண்டும் அஞ்ச வேண்டாம் என அவர்கள் கூறினார்கள். ஒட்டுமொத்த தேசமே எதிர்த்து நின்றால் இந்த கோழைகள் பயந்து ஓடத் தொடங்கிவிடுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க:பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ட்விட்டர்- ராகுல் குற்றச்சாட்டு