தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீடியோ கேம் ஆசையில் உயிரைவிட்ட சிறுவன்

லக்னோ: பெற்றோர் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காததால் 15 வயது சிறுவன் தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

By

Published : Apr 2, 2021, 10:40 AM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் கெளதம் புத் நகரில் வசித்துவந்த 15 வயது சிறுவன் நேற்றிரவு (ஏப்ரல் 1) வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வெகுநேரமாகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இரவெல்லாம் சிறுவனைத் தேடிய பெற்றோர், இது தொடர்பாக காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இதனிடையே, கட்டி முடிக்கப்படாத வீட்டினுள் இருந்து 15 வயது சிறுவனின் உடலைக் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்தச் சடலம் கெளதம் புத் நகரைச் சேர்ந்த சிறுவனின் உடல் எனத் தெரியவந்தது.

இது தொடர்பாக காவல் கூடுதல்ஆணையர் இளமாறன் கூறுகையில், ’சிறுவனின் பெற்றோர் வீடியோ கேம் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த சிறுவன் நேற்றிரவு 8 மணியளவில் வீட்டைவிட்டு வெளியேறி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்’ என்றார்.

காவல் கூடுதல்ஆணையர் இளமாறன்

சிறுவனின் உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மொட்டை அடித்தது குத்தமா? ஃபேஸ் ரெககனஷேசனால் வேலையிழந்த ஊபர் ஓட்டுநர்!

ABOUT THE AUTHOR

...view details