விசாகப்பட்டினம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. 2021-22ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தனியார்மயாமாக்கும் இலக்கில் விசாகப்பட்டினத்தின் உருக்காலையும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தெலங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரான பெல்லா சீனிவாச ராவ் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கையிலெடுத்து எட்டு நாட்கள் போராடிய நிலையில், காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் உள்ள சீனிவாச ராவைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சரும், தெலங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தடுத்து நிறுத்த வேண்டும். இதை செய்ய முடியாத பட்சத்தில் பதவியிலிருந்து விலக வேண்டும். இந்த உருக்காலையை நம்பி ஐந்து லட்சம் மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. அதை மாநில அரசு பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:#MeToo மீ டூ விவகாரம்: அவதூறு வழக்கில் பத்திரிகையாளர் பிரியா ரமணி விடுவிப்பு