தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 10, 2020, 7:43 PM IST

ETV Bharat / bharat

ஈ.வி.எம் இயந்திரங்களை குறைச்சொல்வதை நிறுத்த வேண்டிய நேரமிது - கார்த்திக் சிதம்பரம்

டெல்லி : மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருக்கலாம் என குறைச்சொல்வதை நிறுத்த வேண்டிய நேரமிது என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்திக் சிதம்பரம் எம்.பி., கருத்து தெரிவித்துள்ளார்.

ஈ.வி.எம் இயந்திரங்களை குறைச்சொல்வதை நிறுத்த வேண்டிய நேரமிது  - கார்த்திக் சிதம்பரம்
ஈ.வி.எம் இயந்திரங்களை குறைச்சொல்வதை நிறுத்த வேண்டிய நேரமிது - கார்த்திக் சிதம்பரம்

பிகாரில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது.

தேர்தல் வாக்குப் பதிவுக்கு பின்னான கருத்துக் கணிப்புகளில் ஆர்.ஜே.டி தலைமையிலான மகா கூட்டணிக்கு அமோக வரவேற்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இன்று வெளியாகி வரும் முடிவுகள் அதற்கு நேரெதிராக அமைந்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்புகள் போட்டியிட்ட தொகுதிகளில் பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது.

இதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந் நிலையில், இந்த குற்றச்சாட்டை ஆதாரமற்றது என சிவகங்கை எம்.பி.,யும் காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரம் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ள அவர், " தேர்தலின் முடிவும் எதுவாக இருந்தாலும், வாக்கு இயந்திரங்களைக் குறை கூறுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது.

இனியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை சொல்லி பயன் இல்லை. காரணம், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சரியானது தான். துல்லியமானது தான். அது தனது வேலையை சரியாக செய்கிறது" என தெரிவித்துள்ளார்.

பிகார் தோல்விக்கு வாக்கு இயந்திர முறைகேடே காரணமென காங்கிரஸ் கட்சியினர் கூறிவரும் நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வெளிவந்துள்ள முடிவுகளின் அடிப்படையில் பாஜக ஒற்றை மிகப்பெரிய கட்சியாக மாறியிருப்பதும், காங்கிரஸ் நான்காவது வரிசை நிலையை அடைந்திருப்பதும் தெளிவாகியது.

ABOUT THE AUTHOR

...view details