மைசூரு:கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் விஜயா. கடந்த சில நாட்களுக்கு முன் தீவிர தலைவலி மற்றும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு உள்ளார். இந்நிலையில் அவருக்கு கண்களில் இருந்து கண்ணீருடன் கற்கள் வந்துள்ளது. இதை கண்டு பதறிப்போன அவர், அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகி உள்ளார்.
அங்குள்ள மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற விஜயாவுக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். கண்களில் இருந்து கற்கள் வருவது விநோதமாக இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே முழுத் தகவல்களும் தெரியவரும் என்று கூறினர்.
இதுகுறித்து விஜயா பேசுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கர தலைவலி ஏற்பட்டது. தலையில் உருளை உருளுவது போல் வலித்தது. அதைத் தொடர்ந்து கண்களில் இருந்து கற்கள் விழத் தொடங்கியது. ஏறத்தாழ 200 கற்கள் கண்களில் இருந்து விழுந்தது. பார்வை குறைபாடு ஏற்படாத போதிலும் வலி மற்றும் எரிச்சல் தாங்க முடியாத அளவில் இருந்தது என விஜயா தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், முதல்முறையாக கண்களில் கற்கள் குறித்து ஊர் மக்களிடம் தெரிவித்த போது நடிப்பதாக கூறியதாகவும், அதன்பின் ஒரு ஆசிரியையின் உதவியால் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் விஜயா தெரிவித்தார்.
இதையும் படிங்க:மதுபோதையில் இளைஞருடன் மள்ளுக்கட்டிய காவலர் - வைரல் வீடியோ