உத்தரப்பிரதேசம்:உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு மதரஸா அலியாவில் (அரசு ஓரியண்டல் கல்லூரி) இருந்து திருடப்பட்ட புத்தகங்கள் ஜவஹர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகி அசம்கானை காவல் துறையினர் கைது செய்து, நடத்திய விசாரணையில் இந்தப் புத்தகங்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 2019ஆம் ஆண்டு மதரஸா அலியாவின் புத்தகங்கள் திருடப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பின்னர், சுமார் 2500 புத்தகங்கள் மீட்கப்பட்டன.
தற்போது வழக்கு ஒன்றில் சமாஜ்வாதி கட்சியைச்சேர்ந்த ஆசம் கானின் மகன் அப்துல்லா மற்றும் ஆசமின் நண்பர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையின்போது, மீதமுள்ள புத்தகங்களும் ஜவஹர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு பல சாக்கு முழுக்க புத்தகங்கள் கிடைத்துள்ளன. கிடைத்த புத்தகங்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த புத்தகங்கள் கட்டுமானப்பணி நடந்து வரும் ஒரு லிப்ஃட்டில் வைத்து சுவர் அமைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.