ஹைதராபாத்:உலகளாவிய மந்தநிலை, மீண்டும் கரோனா ஊரடங்கு அச்சம், அதிகரித்து வரும் பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார அச்சுறுத்தலுக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். புதிய ஆண்டில் நிதி நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள். கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பொருளாதார சவால்களை நீங்கள் சந்திருக்கலாம்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இப்போது திட்டமிட வேண்டியது அவசியம். மிக அடிப்படையான தேவைகளான உணவு, உடை, தங்குமிடத்திற்கான செலவுகளை கருத்தில் கொள்ளாமல் திட்டமிலை வகுக்க கூடாது. இதைத்தவிர்த்துவிட்டு சேமிப்பில் குதிக்க கூடாது. இவையெல்லாம் போக மாத ஊதியத்தில் இருந்து குறைந்தது 10 சதவீதத்தை சேமிப்பில் வைக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பின் 20 சதவீதம் கூட ஒதுக்குங்கள்.
அதேபோல வருமானத்தில் 3 முதல் 6 மடங்கு வரை அவசரத் தேவைகளுக்கான தொகையாக பிக்சட் டெபாசிட்டில் போடுங்கள். மாதாமாதம் உங்களின் வருமானம் மற்றும் செலவுகள் அனைத்தும் கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகரிக்க செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை மறந்துவிடாதீர்கள்.
கரோனா காலத்தில் மருத்துவக் காப்பீடு மிகவும் உதவியது. பலர் காப்பீடு செய்யாமல் தவித்தனர். குடும்பத்தில் சிலருக்கு மட்டுமே காப்பீடு செய்தவர்களும் இன்னல்களை சந்தித்தனர். இவற்றை நீங்கள் நினைவில் கொண்டு ஆயுள் மற்றும் உடல்நலக் காப்பீட்டு திட்டங்களை வகுத்துகொள்ளுங்கள். உங்கள் ஆண்டு வருமானத்தில் குறைந்தது 10 மடங்குக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ரூ. 10 லட்சத்துக்கான ஹெல்த் இன்ஷரன்ஸ் பாலிசிகளை எடுக்கலாம்.
கடந்தாண்டு சிறிய அளவிலான கடன்கள் பெரும் உச்சத்தை எட்டின. அதிக தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள், தங்கத்தின் மீதான கடன்கள் பெறப்பட்டுள்ளன. இதனால் டிஜிட்டல் மற்றும் சைபர் குற்றங்கள் மிகவும் அதிகரித்துவிட்டது. பலர் வாங்கிய கடனுக்கு மேலாக பல மடங்கு வட்டியை செலுத்தியும் அதிலிருந்து மீள முடியாமல் இருக்கின்றனர்.
அதேபோல தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. இதை கவனித்தில்கொண்டு ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் மட்டும் கடன் வாங்குங்கள். பொருளாதாரத்தில் எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நிலையான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டங்களை கொண்டிருந்தால் சிக்கலின்றி வாழ்க்கை நடத்தலாம். பணவீக்கத்தை முறியடிக்க முதலீடுகள் தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: இந்தூரில் பிரவாசி பாரதிய திவாஸ் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்