ஆந்திரப்பிரதேசம்: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் மைனர் பெண் ஒருவரைத் தந்தை உறவு முறை கொண்ட ஒருவர் அந்த பெண்ணின் தாயின் துணையோடு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் விளைவாக அந்த மைனர் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அரசு மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாயுடன் கூட்டு சேர்ந்து மகளுக்கு பாலியல் வன்கொடுமை; மைனர் மகளுக்கு ஆண் குழந்தை - anthra pradesh krishna district
ஆந்திர மாநிலத்தில் தாயுடன் துணையோடு ஆண் ஒருவர் மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
தாயுடன் கூட்டு சேர்ந்து மகளுக்கு இரண்டாம் கணவர் பாலியல் வன்கொடுமை; மைனர் மகளுக்கு ஆண் குழந்தை
கடந்த சில மாதங்களாகவே ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தந்தை முறை கொண்ட நபரே இந்த செயலில் ஈடுபட்டது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிலக்கால்புடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து டாக்சி ஓட்டுநரான சுரேஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க:இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் ஏற்பட்ட நட்பு - கைவிடாத மனைவிக்கு கத்திக்குத்து!