பெங்களூரு:கர்நாடக மாநிலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடாவின் 108 அடி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
முந்தைய விஜயநகரப் பேரரசின் கீழ் ஒரு நிலப்பிரபுத்துவ ஆட்சியாளரான கெம்பேகவுடா 1537-ம் ஆண்டு பெங்களூருவை நிறுவினார். பெங்களூர் நகரத்தை உருவாக்கிய கெம்பேகவுடாவை நினைவுகூறும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. "செழிப்பின் சிலை" என்று அழைக்கப்படும் இந்த சிலை சுமார் 220 டன் எடை கொண்டது. இந்த சிலையில் 4 டன் எடையுள்ள வாள் உள்ளது.