தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத் தேர்தல்: அல்லா சோம்நாத்தில் இருக்கிறார்.. முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ - Gujarat election

அல்லா சோம்நாத்தில் இருக்கிறார் என குஜராத் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பேசியுள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

குஜராத் தேர்தல்: அல்லா சோம்நாத்தில் இருக்கிறார்.. முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ
குஜராத் தேர்தல்: அல்லா சோம்நாத்தில் இருக்கிறார்.. முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ

By

Published : Nov 28, 2022, 12:11 PM IST

ராஜ்கோட் (குஜராத்): குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.

அந்த வகையில் ராஜ்கோட் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் வேட்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இந்திரனில் ராஜ்யகுரு, சனிக்கிழமை (நவ 26) ஜங்கலேஷ்வர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய இந்திரனில், “என்னுடைய பார்வையில் மகாதேவனும் அல்லாவும் ஒன்றே. அல்லா சோம்நாத்திலும் மகாதேவன் அஜ்மீரிலும் இருக்கின்றனர். அல்லா ஹூ அக்பர்” என பேசினார். இது தற்போது அரசியல் விவாதத்திற்கு வந்துள்ளது. மேலும் பிரச்சாரம் மேற்கொண்ட ஜங்கலேஷ்வரில் அதிகளவில் இஸ்லாமிய மக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குஜராத் தேர்தல்: நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்கப்படும் - பாஜக வாக்குறுதி

ABOUT THE AUTHOR

...view details