புதுச்சேரியில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக மாநில பாஜக இன்று (டிச.19) முதல் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளது.
'காண்போம் இனி நல்லாட்சி, காங்கிரஸ் இல்லா புதுச்சேரி' என்ற கோஷத்துடன் பரப்புரையை, மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தொடங்கி வைத்தார். இதில் மாநில பாஜக தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் தெரிவித்ததாவது, "கடந்த நான்கு ஆண்டுகளாக புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. தூங்கிக்கொண்டு இருக்கும் அரசை எழுப்புவதற்காக மேளம் அடித்து பரப்புரையைத் தொடங்கி இருக்கிறோம். காங்கிரஸ் அரசின் செயலற்ற தன்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிவுடன் தேர்தலை சந்தித்தோம். சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் அதே கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம். நிச்சயமாக பாஜக வெற்றி பெறும்" என்றார்.
இதையும் படிங்க: எடப்பாடியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி!