தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரண்டாம் அலை தொடர்பாக மருத்துவர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை - முன்னணி மருத்துவர்களுடன் மோடி ஆலோசனை

கோவிட்-19 இரண்டாம் அலை பாதிப்பு தொடர்பாக முன்னணி மருத்துவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

By

Published : May 18, 2021, 12:32 AM IST

பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள முன்னணி மருத்துவர்களிடம் கோவிட்-19 அலை பாதிப்பு நிலை குறித்து காணொலி வாயிலாகக் கலந்துரையாடினார். கூட்டத்தில் பிரதமர் பேசியது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாடு தற்போது சவாலான சூழலை சந்தித்து வரும் நிலையில், பரிசோதனை, மருந்துகள் உற்பத்தி, புதிய உள்கட்டமைப்பு போன்ற தேவைகளை போர்கால அடப்படையில் அரசு மேற்கொண்டு வருகிறது.

எம்பிபிஎஸ் மாணவர்கள், ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் கிரமாப்புற சுகாதராத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் பணியை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற அசாதாரண சூழலில் மருத்துவர்கள் முன்னுதாரணமான செயல்பாட்டை தொடர்ந்து மேற்கொண்டுவருவதற்கு நன்றி.

புதிதாக பரவிவரும் மியூகோமைகோஸிஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளும் பணியை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும். முன்களப் பணியாளர்களுக்கு பிரதான முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 90 விழுக்காட்டிற்கு மேலான மருத்துவப் பணியார்களுக்கு குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளது. இது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளது" எனப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க:’மாட்டு மூத்திரம் குடிக்கிறேன், எனக்கு கரோனா வராது’ - பாஜக எம்பி பிரக்யா சிங்

ABOUT THE AUTHOR

...view details