தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.3.2022) துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் (Dubai International Financial Centre) ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு அப்துல்லா பின்டூக் அல் மர்ரியையும், (H.E. Abdulla Bin Touq Al Marri) ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமதுஅல் சியோதி அவர்களையும் (H.E. Dr. Thani Bin ahmed Al Zeyoudi) சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இச்சந்திப்பின்போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவுப்பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின் வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
துபாய் அமைச்சருக்குக் கருணாநிதி புத்தகம்