பெங்களூரு( கர்நாடகா): கர்நாடகா மாநிலத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. ஹிஜாப் பிரச்னையால் பல்வேறு தடைகளுக்குப் பிறகு இந்த தேர்வு நடைபெற்றது.
நேற்று (மார்ச் 28) தேர்விற்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்குத் தேர்வு அறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. முதல்தாள் தேர்விற்கு 20 ஆயிரத்து 994 மாணவிகள் தேர்வு எழுதவரவில்லை. கர்நாடகாவில் மொத்தம் 8,69,399 மாணவர்கள் தேர்விற்குப் பதிவு செய்திருந்தனர்.
இருப்பினும் நேற்று முதல் மொழித்தேர்வினை 8,48,405 மாணவர்கள் மட்டுமே எழுதியுள்ளனர். இதற்கு முன்னதாக கர்நாடக கல்வித்துறை தேர்வு எழுத வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் அனுமதி கிடையாது என அறிவித்து இருந்தது. இதனையடுத்து தேர்விற்கு வந்த ஒரு சில மாணவிகள் புர்கா மற்றும் ஹிஜாப் அணிந்து வந்திருந்தினர். அவர்களுக்கு உடை மாற்றத்தனி அறை வழங்கப்பட்டிருந்தது. எந்த மாணவர்களும் எந்த ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடவில்லை. யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.