தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜவான் படத்தில் நயன்தாராவின் ஹய்யோடா பாடல் நாளை வெளியீடு: ஷாருக் கொடுத்த தகவல்! - love will find the way to ur heart

ஜவான் படத்தின் நயன்தாரா பாடலான ஹய்யோடா நாளை வெளியிடப்படும் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதள பக்கத்தில், பதிவிட்டுள்ளார்.

ஜவான் படத்தின் 'ஹய்யோடா' பாடல் நாளை வெளியீடு
ஜவான் படத்தின் 'ஹய்யோடா' பாடல் நாளை வெளியீடு

By

Published : Aug 13, 2023, 4:51 PM IST

Updated : Aug 13, 2023, 5:29 PM IST

ஹைதராபாத் :தமிழ் சினிமாவில், ஆர்யா மற்றும் நயன்தாரா நடித்த ராஜா ராணி திரைப்படம் மூலம், திரையுலகில் பிரபலமானவர் இயக்குநர் அட்லீ. அதன் பின்பு முன்னணி நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த அட்லீ, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் இயக்குநராக வலம் வந்தார்.

தற்போது இவர் பாலிவுட் ஸ்டாரான ஷாருக்கானுடன் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் அட்லீ இயக்கத்தில், பாலிவுட் ஸ்டாரான ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், சில தடைகளால் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழியில் திரையரங்குகளில் SRK ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியாகி பல சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், இந்தப் படமும் சர்ச்சையில் சிக்குமா என பல்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கப்படும் நிலையில், அதற்கான வாய்ப்புகளை அவ்வப்போது தன் டீசர் மற்றும் பாடல்களை வெளியிட்டு அதனை தகர்த்து வருகிறது ஜவான் படக்குழு.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி, சன்யா மல்கோத்ரா, ரித்தி தோக்ரா, மற்றும் சுனில் குரோவர் போன்ற முன்னனி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் கைகோர்த்து உள்ளனர்.

சமீபத்தில் பட டீசர் வெளியிடப்பட்ட நிலையில், சமூக வலைதளத்தில் ஒரே நாளில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலான 'வந்த இடம்' என்ற பாடலை படக்குழு அதிகாரப் பூர்வமாக வெளியிட்டது. வெளியான சில நிமிடங்களிலே வலைதளத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து கூடுதல் உற்சாகத்தை அதிகரிக்கச் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, படத்தின் இரண்டாம் பாடல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அனிருத் இசையில் உருவான இந்த படத்தின் இரண்டாவது பாடலை ஹிந்தியில் அர்ஜித் சிங் மற்றும் சில்பா ராவும், தெலுங்குவில் ஆதித்யா ரக்கே மற்றும் பிரியா ஹிமேஷும், தமிழில் அனிருத்தும் பாடி உள்ளனர். பாடல் வெளியீட்டுக்கான ப்ரோமோஷனில் நயன்தாரா மற்றும் SRK நடனமாடுவது போல் காட்சியகப்படுத்தப்பட்டு வெளியாகி உள்ளது. இந்தப் பாடல் தமிழில் 'ஹய்யோடா' என்றும், தெலுங்குவில் 'சலோனா' என்றும், ஹிந்தியில் 'சலேயா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

ஜவான் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து SRK தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் அவர், 'love will find the way to ur heart' என்ற குறிப்புகளுடன் சலேயா பாடலின் டீசரை பதிவிட்டுள்ளார். இந்தப் பாடலில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் கெமிஸ்ட்ரி, பாடலுக்கு ஏற்ற நடனங்கள் மற்றும் பிசிறு தட்டாத பாவனைகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த டீசருக்கு தீபிகா படுகோன் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் அவர்களின் ஆதரவை தெரிவித்து உள்ளனர். இயக்குனர் அட்லீயின் படங்கள் என்றாலே பெரும்பாலும் காபி கிரியேஷன் தான், ஜவான் திரைப்படமும் காபி கிரியேஷனாக தான் இருக்கும் என்று கிண்டல் செய்தவர்களுக்கு, ஜவான் படத்தின் ஹய்யோடா பாடல் டீசர் பதிலளித்து உள்ளது. மேலும் இந்தப்படம் அட்லீ மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முற்றிலுமாக விடையளிக்கும் என இயக்குன்ர் அட்லீயின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜவான் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

Last Updated : Aug 13, 2023, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details