திருப்பதி: திருமலை திருப்பதியில் உள்ள அன்னமய பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் இருந்து புகார்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் உண்டியல் மே மாத வருமானம் இவ்வளவா...? - மொத்தம் 22 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மாத உண்டியல் வருமானமாக 130 கோடியே 29 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதத்தில் மட்டும், மொத்தம் 22 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், ஒரு மாத மொத்த உண்டியல் வருமானமாக 130 கோடியே 29 லட்சம் ரூபாய் கிடைத்ததாகவும் தெரிவித்தார். திருப்பதி வரலாற்றில் ஒரு மாத உண்டியல் வருமானமாக 130 கோடி ரூபாய் கிடைத்துள்ளது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார். அதேபோல், மே மாதத்தில் பக்தர்களுக்கு 1 கோடியே 86 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:விநோத நோய்... ஒரு நாளைக்கு 15 கிலோ உணவு உண்ணும் இளைஞர்...