இலங்கை:ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (செப். 14) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் சூப்பர் 4 சுற்றின் 5வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக இலங்கையில் நடைபெற்று வரும் 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கருதப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகளை பந்தாடி அபார வெற்றி பெற்று 9வது முறையாக இந்திய அணி இறுதி பேட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றிலேயே இந்திய அணி வெளியேறி இருந்த நிலையில், இந்த முறை இறுதி போட்டி வரை தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இறுதி போட்டியில் இந்தியாவை எதிரக்கொள்ளும் அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி பேட்டிக்கு முன்னேறும்.
இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் 4வது ஆட்டத்தில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, இன்றைய பேட்டியில் வெற்றி பெற்று இந்திய அணியை பழி தீர்க்கும் முனைப்பில் உள்ளது. அதேபோல் கடைசி பேட்டியில் இந்தியாவுடன் போரடி தோல்வி அடைந்த இலங்கை அணியும் முழு நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இன்றைய ஆட்டத்தில் மழையின் தாக்கம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல் மழையால் ஆட்டம் ரத்தாகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழக்கப்படும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இறுதி போட்டிக்கு செல்லும் அணி கண்டறியப்படும். இந்த மோதலில் இலங்கை அணியே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், இலங்கை அணி பாகிஸ்தானை விட ரன்ரேட்டில் அதிக புள்ளிகளை கொண்டு உள்ளது. பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் நேபாள அணியுடன் அபார வெற்றி பெற்றாலும் இந்திய அணிக்கு எதிரான பேட்டியில் மோசமான தேல்வியை சந்தித்ததால் ரன்ரேட் குறைவாக உள்ளது. மேலும் இன்று நடைபெறும் பேட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்படவிலை.
இந்நிலையில் பலம் வாய்ந்த இந்திய அணியை இறுதி போட்டியில் எதிர்த்து களம் காணப்போவது யார்? என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதால் இன்றைய பேட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க:"நீதித் துறை நிர்வாகத்தை பாதிக்கிறதா ஊடகங்கள்...?" உச்ச நீதிமன்றம் கூறும் கருத்து என்ன?