தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு: அமைச்சருக்கு நன்றி தெரிவித்த தமிழிசை! - lieutenant governor Tamilisai Soundhararajan

புதுச்சேரி: இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று (மார்ச் 27) விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்காக விரைவாக நடவடிக்கை எடுத்த, வெளிவிவகார அமைச்சருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு
புதுச்சேரியில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

By

Published : Mar 27, 2021, 6:27 PM IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கைக் கடற்படையால் காவலில் வைக்கப்பட்ட, காரைக்கால் மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சவுந்தரராஜன் மேற்கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாக, மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட அனைத்துப் படகுகளும் நேற்று (மார்ச் 26) விடுவிக்கப்பட்டன. சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் இன்று (மார்ச் 27) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

மீனவர்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்துவர வெளியுறவுத் துறை அமைச்சகம் இப்போது, இலங்கைத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்புகொண்டுள்ளது.

இதற்கிடையே துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விரைவாக நடவடிக்கை எடுத்த, வெளிவிவகார அமைச்சருக்கு தனது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், நாடு திரும்பும்வரை தொடர்ந்து வெளியூர் துறை அமைச்சகத்துடன் தொடர்புகொண்டு வருகிறார்.

இவ்வாறு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படையால் 20 மீனவர்கள் கைது '

ABOUT THE AUTHOR

...view details