குஜராத் மாநிலம், ஹசிராவில் இருந்து ரசாயனப் பொருள்களை ஏற்றிக்கொண்டு, இலங்கைக்கு ‘எக்ஸ்பிரஸ் பியர்ல்’ என்ற சரக்கு கப்பல் புறப்பட்டு சென்றது. இந்நிலையில், மே 20 தேதியன்று, இலங்கை துறைமுகத்திலிருந்து 18 கி.மீ(9.5 கடல் மைல்) தொலைவில் சென்ற போது ‘எக்ஸ்பிரஸ் பியர்ல்’ கப்பலில் திடீரென தீப்பிடித்தது.
நடுக்கடலில் பற்றி எரிந்த கப்பல்: களத்தில் இந்தியக் கடலோரக் காவல்படை! - வைபவ், வஜ்ரா மற்றும் சமுத்ரபிரஹரி
இலங்கையில் ‘எக்ஸ்பிரஸ் பியர்ல்’ சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இந்தியக் கடலோரக் காவல் படையின் மூன்று கப்பல்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கையைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் களமிறங்கினர். முதற்கட்டமாக, ஐந்து இந்தியர்கள் உட்பட கப்பலிலிருந்த 25 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்தக் கப்பலில் சுமார் 25 டன் அபாயகரமான நைட்ரிக் அமிலம் உள்ளது.
இந்நிலையில், தீயை அணைத்திட இந்தியாவிடம் இலங்கை உதவி கோரியது. அதன்பேரில், இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான வைபவ், வஜ்ரா மற்றும் சமுத்ரபிரஹரி ஆகிய 3 கப்பல்களும் அனுப்பப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் களமிறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.