இந்தியாவில் முதற்கட்டமாக கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்த நிலையில், கடந்த வாரம் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தத் தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் பாலா வெங்கடேஷ் வர்மா தகவல் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், ”இந்தியாவிற்கு இதுவரை சுமார் இரண்டு லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்கள் ரஷ்யாவிலிருந்து கிடைத்துள்ளன. மே மாத இறுதிக்குள் 30 லட்சம் டோஸ்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.