மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, டாக்டர் கர்ணி சிங் துப்பாக்கிச்சூடு தளத்தில் 12.26 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட விடுதியைத் திறந்துவைத்தார். இந்த விடுதியில் 162 படுக்கைகளும், குளிர்சாதன வசதி கொண்ட டைனிங் ஹாலும் உள்ளன.
துப்பாக்கிச்சுடுதல் வீரர்களுக்கு ஹைடெக் விடுதி: அமைச்சர் திறந்துவைப்பு!
டெல்லி: டாக்டர் கர்ணி சிங் துப்பாக்கிச்சூடு தளத்தில் 162 படுக்கைகள் கொண்ட புதிய விடுதியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு திறந்துவைத்தார்.
கிரண் ரிஜிஜூ
இது குறித்து பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, நமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு ஆகியவற்றில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
அவர்கள் தங்கும் இடங்களில் அடிப்படை வசதிகளுடன் சிறந்த சூழல் இருக்க வேண்டும். அதேபோல், பெண்களுக்காகப் பிரத்யேக விடுதியும் உள்ளது. துப்பாக்கிச்சுடுதல் முன்னுரிமை விளையாட்டாக இருப்பதால், வீரர்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.