அஸ்ஸாம் மாநிலம் சோனித்பூரில் இன்று (ஏப்ரல் 28) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் எந்த ஒரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலிடம் கேட்டறிந்துள்ளார்.
இது குறித்து மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில், ”அஸ்ஸாம் முதலமைச்சரிடம் நிலநடுக்கம் குறித்துக் கேட்டறிந்தேன். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். அஸ்ஸாம் மக்களின் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
அதேபோல் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டர் பக்கத்தில், “அஸ்ஸாம் முதலமைச்சரிடம் நிலநடுக்கம் குறித்து கேட்டறிந்தேன். மத்திய அரசு அஸ்ஸாமில் உள்ள சகோதரர், சகோதரிகளுக்கு உறுதுணையாக நிற்கிறது. அனைவரின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட்