டெல்லி:டெல்லியிலிருந்து இன்று (ஜூலை 5) புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நாடு வானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானி பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். அதன்படி அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்பக்கோளாறு: டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் திடீரென பாகிஸ்தானில் தரையிறக்கம் - dubai
டெல்லியில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்லி ஸ்பைஸ்ஜெட்
இந்த விமானம் டெல்லியிலிருந்து துபாய் நோக்கி செல்ல புறப்பட்டது. முதல்கட்ட தகவலில், விமானத்தின் இண்டிகேட்டர் லைட் செயல் இழந்ததால் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்பைஸ்ஜெட் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அதோடு இதிலிருந்து பயணிகள் மாற்றொரு விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:அந்தமான் தலைநகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Last Updated : Jul 5, 2022, 2:14 PM IST