கொச்சி:சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி விமானக் குழுவினர் 6 உட்பட 197 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் (எஸ்ஜி 036) இன்று (நவம்பர் 2) புறப்பட்டது. இந்த விமானம் கேரள வான்பரப்பில் சென்றுகொண்டிருந்தபோது, ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானிகள் கொச்சின் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு... ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்... - flight emergency landing at Kochi airport
சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து கோழிக்கோடு நோக்கி 197 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டது.
ஸ்பைஸ்ஜெட் விமானம்
இதற்கு விமானநிலைய நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இரவு 7.19 மணியளவில் விமானம் தரையிறக்கப்பட்டது. அதன்பின் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விமான தொழில்நுட்பக்குழு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்த விமான போக்குவரத்து கழகம் உத்தவிட்டுள்ளது.
இதையும் படிங்க:அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு: மைக்கேல் ஜேம்ஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு