தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹாங்காங் டூ டெல்லி: 800 ஆக்சிஜன் செறிவு இயந்திரங்களைக் கொண்டுவந்த ஸ்பைஸ்ஜெட்! - ஸ்பைஸ்ஹெல்த் சுகாதார நிறுவனம்

நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால், ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு 800 ஆக்சிஜன் செறிவு இயந்திரங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விமானத்தில் கொண்டுவந்துள்ளது.

SpiceJet
ஸ்பைஸ்ஜெட்!

By

Published : Apr 25, 2021, 8:43 AM IST

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது. நோயாளிகளின் அதீத எண்ணிக்கையால், மருத்துவமனைகள் திணறிவருகின்றன.

இந்நிலையில், ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு 800 ஆக்சிஜன் செறிவு இயந்திரங்களை (oxygen concentrators) ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

இதனை, அவசரகாலப் பயன்பாட்டிற்காக நாடு முழுவதும் விநியோகிக்க உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை ஸ்பைஸ் எக்ஸ்பிரஸின் பி 737 சரக்கு விமானம் இந்தியாவுக்கு கொண்டுவந்தது.

இது குறித்து ஸ்பைஸ்ஜெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகையில், "இந்தக் கடினமான காலகட்டத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியர்களுடன் நிச்சயம் துணைநிற்கும்.

இந்தியாவில் அவசரகாலப் பயன்பாட்டிற்காக ஹாங்காங்கிலிருந்து 800 ஆக்சிஜன் செறிவு இயந்திரங்களை விமானத்தில் கொண்டுவந்துள்ளோம். மேலும் வரும் நாள்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவு இயந்திரங்களை உலகம் முழுவதுமிருந்து கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்.

கடந்தாண்டு, பெருந்தொற்றின்போது, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை இந்தியா, உலகின் அனைத்து மூலைகளிலும் கொண்டுசென்றோம். அதே வீரியத்துடன் இம்முறையும் பணியாற்றுவோம்" எனத் தெரிவித்தார்.

ஸ்பைஸ்ஜெட்டின் விளம்பரதாரர்களால் தொடங்கப்பட்ட ஸ்பைஸ்ஹெல்த் என்ற சுகாதார நிறுவனம், கோவிட்-19-க்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நவம்பர் 2020இல் தொடங்கப்பட்டதிலிருந்து, தற்போதுவரை ஐந்து மாநிலங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஆர்டி-பிசிஆர் சோதனைகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா சிகிச்சைக்காகத் தயார் நிலையில் ரயில் பெட்டிகள்!

ABOUT THE AUTHOR

...view details