தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸிற்கு டாட்டா. பாஜகவில் நக்மா? பரபரப்பு தகவல்! - நக்மா

நடிகை நக்மா காங்கிரஸ் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்காத நிலையில், நடிகை நக்மா அதிருப்தி தெரிவித்திருந்தார்.

Nagma
Nagma

By

Published : Jun 4, 2022, 3:58 PM IST

Updated : Jun 4, 2022, 4:41 PM IST

ஹைதராபாத்: 1990-2000ஆம் ஆண்டுகளில் தமிழ் உள்பட இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை நக்மா. பின்னாள்களில் படவாய்ப்புகள் இன்றி தவித்த நக்மா, ஒரு பாடலுக்கு நடனம் மற்றும் கெஸ்ட் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மறுபுறம் நடிகர் சரத் குமாருடன் காதல், கங்குலியுடன் நட்பு என இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டார். இந்த நிலையில், 2003ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து, தீவிரமாக கட்சிப் பணி ஆற்றிவந்தார். கட்சித் தலைவர்களான சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருடன் தீவிர நெருக்கமாகவே இருந்தார்.

பல மாநில சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில் அண்மையில் நடிகை நக்மா அதிருப்தி கருத்து ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், “2003ஆம் ஆண்டு எனக்கு தனிப்பட்ட முறையில் அளித்த வாக்குறுதி என்னாச்சு?” என்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியை பார்த்து கேள்வியெழுப்பியிருந்தார்.

மேலும் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது நடிகை நக்மா காங்கிரஸ் இருந்து விலகி பாஜகவில் இணையப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நக்மாவுக்கு காங்கிரஸில், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் ஜம்மு- காஷ்மீர், லடாக், புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக அதிருப்தி காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: 'எனக்கு தகுதி இல்லையா சோனியா ஜி'... புலம்பும் நக்மா!

Last Updated : Jun 4, 2022, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details