தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தானில் மாற்றுத் திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

மாற்றுத் திறனாளி சிறுமி ஒருவர் ராஜஸ்தானில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கவலைக்கிடாக உள்ளார்.

minor girl gangraped
minor girl gangraped

By

Published : Jan 12, 2022, 5:21 PM IST

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வர் மாவட்டத்தின் அருகே மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் கொடூரமான பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அவர் சாலை ஓரத்தில் வீசப்பட்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் அவர் தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை சிறப்பு குழு ஒன்றை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடிவருகின்றனர். குறிப்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து ஏதேனும் துப்பு கிடைக்குமான என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்துவருகிறது.

இந்த சம்பவத்திற்கு அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக, ஆளும் காங்கிரஸ் அரசின் மீது கடும் கண்டனத்தை முன்வைத்துள்ளது. கடந்த ஒருவருடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றம் 17.03 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது.

இதையும் படிங்க:இணையதள செயலி மூலம் பணத்தை இழந்த இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details