தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா நோயாளிகளின் மருத்துவமனையான கதிர்காமம் மருத்துவமனை - Special treatment for corona patients at Kathirkamam Hospital

புதுச்சேரி: கதிர்காமம் அரசு மருத்துவமனை கரோனா நோயாளிகளை மட்டும் கவனிக்கும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

Special treatment for corona patients at Kathirkamam Hospital
Special treatment for corona patients at Kathirkamam Hospital

By

Published : Apr 8, 2021, 10:46 AM IST

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த மாநிலங்களில் கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கதிர்காமம் அரசு மருத்துவமனை கரோனா நோயாளிகளை மட்டும் கவனிக்கும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் அந்த மருத்துவமனையில் பொது நோய்களுக்கான சிகிச்சை ரத்துசெய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் 255 கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மறு உத்தரவு வரும்வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொது நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுசெய்யபட்டுள்ளது.

இந்த நடைமுறை ஏற்கனவே பின்பற்றப்பட்டு கரோனா பாதிப்பு குறைந்ததும் மாற்றப்பட்டது. தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details