பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் நான்காண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, சசிகலா கடந்தாண்டு ஜனவரி 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆனார்.
அவர் சிறையில் இருந்தபோது, தங்களுக்கு சிறப்பு சலுகை அளிக்க வேண்டி சிறை அலுவலர்களுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக, அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் அளித்தார். இதையடுத்து, 2018இல் கர்நாடக அரசு இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் வினய்குமார் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழு சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக 245 பக்க அளவில் அறிக்கை தாக்கல் செய்தது.