தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பீகார் ரயில் விபத்து; 1,006 பயணிகளுடன் கவுகாத்திக்கு சிறப்பு ரயில் சேவை தொடக்கம்! - பீகார் ரயில் விபத்து

Special Train: வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே விபத்து ஏற்பட்ட நிலையில், அதில் பயணம் செய்த பயணிகள் சிறப்பு ரயிலுக்கு மாற்றப்பட்டு, அதற்கான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Special Train
பீகார் ரயில் விபத்து

By ANI

Published : Oct 12, 2023, 11:56 AM IST

பீகார்: டெல்லி ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி காமாக்யாவுக்கு வடகிழக்கு எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12506) ரயில் சென்று கொண்டிருந்தபோது, கிழக்கு மத்திய ரயில்வேயின் டானாபூர் கோட்டத்தின் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று (அக்.11) இரவு 09.30 மணியளவில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டது.

இந்த விபத்தில் சுமார் 70 பேர் படுகாயமடைந்ததாக உள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது என்று கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) பிரேந்திர குமார் தெரிவித்து உள்ளார்.

மேலும், விபத்து நடைபெற்றுள்ள பக்சர் மாவட்டத்தின் ரகுநாத்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள பகுதியில் மாநில மற்றும் தேசிய மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ரயில் தடம் புரண்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இது மட்டுமல்லாது, வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மீட்புப் பணிகள் முடிவடைந்த பிறகு விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என்றும் கிழக்கு மத்திய ரயில்வேயின் (ECR) பொது மேலாளர் தருண் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

விபத்து தொடர்பாக, காசி பாட்னா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் (15125) மற்றும் பாட்னா காசி ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் (15126) ஆகிய இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் அறிவித்தது. இதற்கிடையில், இன்று (அக்.12) அதிகாலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

பின், மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதாக தனது 'X' வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்தார். அதில், "மீட்புப் பணிகள் முடிந்தது. அனைத்து பெட்டிகளும் சரிபார்க்கப்பட்டன. பயணிகள், அவர்களின் பயணத்திற்காக சிறப்பு ரயிலுக்கு மாற்றப்படுவார்கள்" என்று தெரிவித்த நிலையில், 1,006 பயணிகளுடன் பீகார் மாநிலம் பக்சரில் இருந்து ரகுநாத்பூர்-க்கு சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இதையும் படிங்க:“மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் விரோத ஆட்சி நடக்கிறது” - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details