டெல்லி: உக்ரைன் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட மேலும் 160 இந்தியர்கள் இன்று (மார்ச் 7) காலை நான்கு மணியளவில் ஏர் ஆசியா விமானம் மூலமாக வந்தடைந்தனர்.
மீட்கப்பட்டவர்களில் ஹரிஷ்மா என்னும் பெங்களூருவைச் சேர்ந்த மாணவர் கூறுகையில், “இது மிகவும் கடினமான நேரம். மெட்ரோ சுரங்கப்பாதை வழியாக மூன்று நாள்கள் பயணம் செய்தோம். உக்ரைன் நாட்டு எல்லையை வந்தடைந்ததும் இந்திய தூதரகத்தினர் எங்களை மீட்டு வந்தனர். உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை அவர்களே எங்களுக்கு வழங்கினர். இந்தியா வந்தடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார்.
கோவர்தன் என்னும் மாணவர் கூறுகையில், “உக்ரைன் எல்லையை கடந்த பின்பு இந்திய தூதரகம் எங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தனர். எங்களை பாதுகாப்பாக மீட்டதற்கு இந்திய தூதரகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.