மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குடியிருப்பு பகுதியை மாற்றியமைப்பதில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பான வழக்கில், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று(ஜூலை 31) கைது செய்தனர். இதையடுத்து இன்று மருத்துவப் பரிசோதனை முடிவடைந்து, மும்பை அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் ஆஜர் படுத்தப்பட்டார்.
ராவத்தை எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதேநேரம் இந்த சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கு புனையப்பட்டது என்றும், குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் சஞ்சய் ராவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை பதிவு செய்த நீதிமன்றம், ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை சஞ்சய் ராவத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.