புதுச்சேரிமாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'புதுச்சேரி சட்டப்பேரவை வரும் பிப்ரவரி 3-ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் என முடிவு செய்யும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு குளிர்கால கூட்டமாக சபை கூட்டப்படுகிறது.
வரும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் இம்முறை தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். புதுவையில் பணியாற்றும் 90 சதவீத அதிகாரிகள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். ஒரு சில அதிகாரிகள் ஒத்துழைப்புத் தருவதில்லை. அவர்கள் மீது வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அனுமதியுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
மேலும் பேசிய அவர், 'மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி அளிக்கிறது. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல், அதிகாரிகள் திருப்பி அனுப்பி விடுகின்றனர். ஜல்சக்தி திட்டத்தில் மத்திய அரசு ரூ.33 கோடி நிதி புதுவைக்கு ஒதுக்கியது. இதில் ரூ.1 கோடியை மட்டும் செலவு செய்து மீதியை திருப்பி அனுப்பியுள்ளனர்.