தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வீட்டிலேயே தடுப்பூசி' சர்ச்சையில் சிக்கிய பிரக்யா தாக்கூர் - தேசிய செய்திகள்

வீட்டிலேயே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா தாக்கூர் கூறியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Pragya Singh
Pragya Singh

By

Published : Jul 15, 2021, 8:52 PM IST

பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் செயல்பட்டுவரும் நிலையில், நேற்று (ஜூலை 14) பிரக்யா சிங் முதல் தடுப்பூசி டோஸை செலுத்திக்கொண்டார்.

இவர் முதல் தடுப்பூசி டோஸை தனது இல்லத்திலேயே செலுத்திக்கொண்டர் என்று தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. காங்கிரஸ் முன்னணி தலைவர் நரேந்திர சலுஜா, பிரக்யா சிங் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அதில், 'பிரதமர் மோடி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்போது பிரக்யா சிங்கிற்கு மட்டும் என்ன தனி விலக்கு' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சர்ச்சை தொடர்பாக பிரக்யா சிங் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

இதையும் படிங்க:சரக்கு போதும்;சைடிஷ் வேண்டாம் - குரங்கு அடித்த லூட்டி

ABOUT THE AUTHOR

...view details