வட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்குப் பருவமழை, நாட்டின் கிழக்கு மாநிலங்களில் தொடங்கவுள்ளது.
அங்கிருந்து ஜூலை 10ஆம் தேதிக்குள் பஞ்சாப், வடக்கு ஹரியானாவை உள்ளடக்கிய வடமேற்கு வரை பரவக்கூடும். அதன்படி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லியின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
அதைத்தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனால் கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல இன்று(ஜூலை.8) முதல் 12ஆம் தேதி வரை வரை மகாராஷ்டிரா, கோவா, லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா, மாஹே ஆகிய பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும். மும்பை கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அப்போது காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ வரை இருக்கக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.