தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தென் கொரிய தூதர் ராமோஜி பிலிம் சிட்டிக்கு வருகை - South Korean Ambassador

தென் கொரிய தூதர் சாங் ஜே போக், ராமோஜி பிலிம் சிட்டிக்கு வருகை தந்து, அங்கு நடைபெறும் திரைப்பட தயாரிப்பு பணிகளை நேற்று (ஆகஸ்ட் 18) பார்வையிட்டார்.

ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் உடன் தென் கொரிய தூதர் சாங் ஜே போக் சந்திப்பு
ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் உடன் தென் கொரிய தூதர் சாங் ஜே போக் சந்திப்பு

By

Published : Aug 19, 2022, 7:46 AM IST

ராமோஜி பிலிம் சிட்டி: தென் கொரிய தூதர் சாங் ஜெ போக் தலைமையிலான பிரதிநிதிகள் ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் ராமோஜி பிலிம் சிட்டியை சுற்றி பார்த்தனர். படப்பிடிப்புக்குத் தயாராகும் செட்கள், படப்பிடிப்பு தளங்கள் மற்றும் ஸ்டூடியோக்கள் உள்ளிட்ட பல திரைப்படத் தயாரிப்பு வசதிகளை தென் கொரிய பிரநிதிகள் பார்வையிட்டனர்.

ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் உடன் தென் கொரிய தூதர் சாங் ஜே போக் சந்திப்பு

திரைப்படம் சார்ந்த பல்வேறு சேவை மற்றும் தயாரிப்பு வசதிகள், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பல்வேறு துறைகள் மற்றும் திரைப்பட தயாரிப்புகள் பணிகள் ஆகியவற்றை பிரதிநிதிகள் கண்டு ரசித்தனர். ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள உட்புற செட் டிசைன் மற்றும் கட்டுமான வசதிகள் உள்ள 'மாயா' அரங்கத்தையும் சாங் ஜெ போக் பார்வையிட்டார். மேலும், நிஜத்தை போன்று உருவாக்கப்பட்ட கட்டட வடிவமைப்புகளின் லாவகத்தையும், கலை நுணக்கத்தையும் அவர் கண்டு வியந்தார்.

ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் உடன் தென் கொரிய தூதர் சாங் ஜே போக் சந்தித்து பேசினார். அப்போது கொரிய பிரதிநிதி ங்கு ஜுங் ஹூய்ன், ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி, இயக்குநர் சோஹனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:ராமோஜி ஃபிலிம் சிட்டி மற்றும் ஐஆர்சிடிசி இடையே சுற்றுலா ஒப்பந்தம்

ABOUT THE AUTHOR

...view details