தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

500 புதிய விமானங்கள் வாங்க ஏர் இந்தியா முடிவு! - டாடா விஸ்தாரா

ஏர் இந்தியா(Air India) 500 புதிய விமானங்கள் வாங்க விரைவில் ஒப்பந்தம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

File photo
File photo

By

Published : Dec 12, 2022, 7:13 AM IST

Updated : Dec 12, 2022, 8:10 AM IST

டெல்லி:சர்வதேச அளவில் பிரபல தொழில் நிறுவனமான டாடா(TATA) குழுமம் 1932-ல் தொடங்கிய ஏர் இந்தியாவைத் தொடர்ந்து இயக்க முடியாததால் 1953-ல் மத்திய அரசிடம் கொடுத்தது. ஆனால், ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால் அதனை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்ட நிலையில் மீண்டும் அதனை டாடா நிறுவனமே கையகப்படுத்தியது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள ஏர்-இந்தியா விமான நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் நிர்வகித்து வருகிறது. விமானச் சேவையை மேம்படுத்தும் நோக்கிலும், லாபத்தில் இயக்கவும் முடிவு செய்துள்ள அந்நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாயில் சுமார் 500 புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 400 சிறிய வகை ஜெட் விமானங்கள் என்றும், 100 ஏர்பஸ் மற்றும் போயிங் என்றும் கூறப்படுகிறது.

File photo

ஏர்-இந்தியாவை லாபகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக டாடா விஸ்தாரா, ஏர் இந்தியாவுடன் இணைக்கும் திட்டம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:வீடியோ: ஒரே வீட்டில் ஆயிரக்கணக்கான தேள்கள்

Last Updated : Dec 12, 2022, 8:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details